“அடப்பாவி மனுசா… உள்ள பொண்ணு ஸ்பீக்கர முழுங்கின மாதிரி காட்டு கத்து கத்திட்டு இருக்கா… அதுவும் இவர் அப்பா அம்மாவோட… இவர் என்னடான்னா… கூலா பேப்பர் படிச்சுட்டு இருக்கார்… என்ன குடும்பம்டா” நினைக்கும் போதே… மனசாட்சி… கெக்க பிக்க என்று சிரிக்க ஆரம்பிக்கப் போக… அது பேச ஆரம்பிக்கும் முன்னேயே… “என் குடும்பம்… என் பொண்டாட்டிதான்… நீ அடங்கு” என்று அடக்கியவனாக… பைக்கை நிறுத்திவிட்டு… தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தவனுக்கு… அவன் அணிந்திருந்த கண்ணாடியை பார்த்து… இது ஒண்ணுதான் உனக்கு குறைச்சல்… என்றபடியே முகத்தில் இருந்து கழட்டி… வேக வேகமாக தன் மாமனார் நட்ராஜை நோக்கிப் போனவன்… ----- நட்ராஜின் தாயார்… மற்றும் தந்தை இருவரும் நிற்க… கண்மணி… இடுப்பில் கை வைத்தபடி அவர்கள் இருவரையும் அரட்டிக் கொண்டிந்தவள்… ரிஷி உள்ளே வரும் அரவம் கேட்டு திரும்பியவள் இவனைப் பார்த்து விட்டு… கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் மீண்டும் திரும்பி விட… இங்கு ரிஷியின் நிலைதான் வேறு மாதிரி ஆகி இருந்தது… ---- “தம்பி… நான் சொல்வேனே… இந்தப் பையன் தான்… இவள கட்டிக்கிட்டவன்… இவ பேசுறதெல்லாம் கேட்டா.. இந்தப் பையனுக்கு உசுறு மிஞ்சுமா என்ன… காது கேட்காதது நல்லதுதான்… “ ”என்னது….” என்று ரிஷி அதிர்ந்து பார்வை பார்க்க… ---- ஒரு நொடி… என்ன பேசுவது… என்ன பேசிக் கொண்டிருந்தோம்… ரிஷியிடம் பேசுவதா… இல்லை காந்தமாளிடம் சண்டை போடவா… இல்லை அவன் கைகள் தன் இடுப்பில் பதிந்திருந்ததை எடுக்கச் சொல்வதா… எதை முதலில் செய்வது… அப்படி சொல்வதை விட எதைச் செய்வது என்றே தெரியாத நிலை… --- “கண்மணி… என்னதான் புருசன் பொண்டாட்டினாலும்… கதவைத் தட்டிட்டு போறதுதான் நாகரீகம்…” என்று தன்னைத்தானே குட்டிக் கொண்டபடி… கதவை மெல்லத் தட்ட… --- “நீங்க ஒரு டைம்ல ஒரு கொஸ்டீன் கேட்க மாட்டீங்கள்ளா… வரிசையா கேட்டுட்டே இருக்கீங்க… எதுக்கு ஆன்சர் சொல்றது…” பதில் சொல்லாமல் கண்மணி பேச்சை மாற்ற ---- “கண்மணி… என்ன பேசப் போனியோ… அதைக் கேட்டுட்டு வந்துரு… இல்லை இன்னைக்கு ஃபுல்லா… இப்டி தான் சுத்திட்டு இருக்கனும்..” உள்ளிருந்த அதிகாரக்குரல் இயக்க… இப்போது பழைய பன்னீர்செல்வமாக மாறி இருந்தாள்…. முதலில் வந்த வேகத்தை விட வேகமாக மாடிப்படி ஏறியவள்… மூச்சிறைக்க அதே வேகத்தில் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக… --- “என்ன ரிஷிக்கண்ணா… வேற ஏதோ நெனச்சு பயந்துட்டீங்களா..” என்று இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கியவளாக கேட்க… “அடிங்.. ரிஷிக் கண்ணவா…” --- ”கொஞ்சம் சீரியஸான மேட்டர் ஆர்கே… அந்த யமுனா விசம் குடிச்சுட்டா… நல்ல வேளை காப்பாத்திட்டாங்க ” சொன்ன போதே ரிஷியின் முகத்தில் கருமை பரவ ஆரம்பிக்க… பதட்டம் ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்.. “ஏன் காதல் தோல்விய ஏத்துக்க முடியலையா… பெரிய ரோமியோ ஜூலியட் காதல்… நல்ல பசங்கள லவ் பண்ண பொண்ணுங்களே… கல்யாணம்னு வந்துட்டா… புருசன் குடும்பம் குழந்தைங்கன்னு வாழ ஆரம்பிச்சுடுறாங்க… இந்த பொண்ணுக்கு என்னவாம்…” --- பவித்ரா நாம கரணத்தில் இருக்க… அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் எடுத்து மீண்டும் உள்ளே வைத்த ரிஷி... அங்கிருந்த நட்ராஜின் சில டாக்குமெண்ட்டுகள் மட்டுமே முக்கியம் என்பதால் கவனமாகத் தேடி அத்தனையையும் எடுத்தவன்… -----
3